அதிக உடல் உஷ்ணத்தை குறைக்கும் எளிய வீட்டு முறை வழி இதோ..!!

நம்மில் பெரும்பாலானோர் அதிகப்படியான உடல் உஷ்ணத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றோம். இந்த உடல் சூடு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது.

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு

  • பித்தம்
  • தலைமுடி உதிர்தல்
  • வாய்ப்புண்
  • தோள் தொடர்பான பாதிப்பு

உடல் உஷ்ணத்தை தணிக்க எளிய தீர்வு

தேவையான பொருட்கள்

  1. தண்ணீர்
  2. சோம்பு,
  3. சீரகம்,
  4. கற்கண்டு

செய்முறை

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி சோம்பு மற்றும் சீரகம் ஒரு தேக்கரண்டி சேர்த்து முந்தின நாள் இரவு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

மறுநாள் காலையில் அடுப்பில் பாத்திரம் வைத்து ஊற வைத்துள்ள பொருட்களை தண்ணீருடன் சேர்க்கவும் அதன் பின் ஒரு துண்டு கற்கண்டு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். அடுப்பை அணைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருக வேண்டும். நாம் சேர்த்துள்ள பொருட்கள் அனைத்தும் உடல் உஷ்ணத்தை குறைக்கக்கூடிய பொருட்களாகும்.

Read Previous

பல் சொத்தை பல் வலி நீங்க எளிய வீட்டு முறை வைத்தியம்..!!

Read Next

நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளிகளை கரைத்து வெளியேற்ற இதை குடித்தால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular