
நம் உட்கள்ளும் உணவில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்று அறுசுவைகளும் அடங்கியுள்ளது. நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை உணவுகள் மீது அலாதி பிரியம் இருக்கும்.
அந்த வகையில் சிலருக்கு காரமான உணவு வகைகள் மிகவும் பிடித்தமானதா அமைகிறது. அப்படி காரமான உணவை தொடர்ந்து சாப்பிடும் போது நமது நாக்கும், வாயும் சில நிமிடங்கள் புண்ணாகி விட வாய்ப்பு உள்ளது .மேலும் நீண்ட நேரம் எரிச்சலாகவும் இருக்கும். எனவே காரமாக சாப்பிடும் போது எரிச்சலை சில வீட்டு பொருட்கள் மூலம் எப்படி சரி செய்யலாம் என்பது இப்பதிவில் காண்போம்.
காரமான உணவு உண்ட பிறகு பால் அல்லது பால் பொருட்களான தயிர், பாலாடை கட்டி, க்ரீம் போன்ற பொருட்களை உட்கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள கேசின் என்னும் புரதம் வாய் மற்றும் நாக்கு எரிச்சலை குணப்படுத்துகிறது. மேலும் பால் பிடிக்காதவர்கள் காரமான உணவினை உட்கொண்டால் ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்ற அமிலத்தன்மை உடைய ஏதேனும் ஒரு பானத்தை அருந்தலாம்.
காரமான உணவுக்கு பின் ஏதேனும் ஒரு மெல்லிய ரொட்டி, காரம் இல்லாமல் வேகவைத்த உருளைக்கிழங்கு அல்லது வேறு அரிசி சோறு போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது எப்பொழுதும் நம் வீட்டில் இருக்கும் சர்க்கரை அல்லது தேன் ஆகிய இரண்டில் ஏதோ ஒன்றை காரமான உணவுக்கு பின் எடுத்துக் கொண்டால் நாக்கில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்தலாம்.