இன்றைய தலைமுறையினர் பலரும் இறைவனிடத்தில் தூங்குவதே இல்லை காலை இரவு என நேரம் தோறும் ஸ்மார்ட் ஃபோன்களை தன் கையிலும் தன் பாக்கிட்குள்ளும் அடக்கி தனது தூக்கத்தை கெடுத்து வருகின்றனர், இதனால் உடல் பாதிப்பு மற்றும் உடலுக்கு தேவையற்ற ஆரோக்கிய தொந்தரவுகள் ஏற்படுகிறது..
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பகல் இரவு என நேரகண்ட நேரத்தில் தூங்காமல் ஸ்மார்ட் ஃபோன்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர், தொடர்ந்து செல்போன் துறையை பார்ப்பது சுயநினைவை இழக்க செய்கிறது மேலும் ஞாபக மறதியை அதிகப்படுத்துகிறது, குறுகிய கால நினைவாற்றலை உண்டு பண்ணுகிறது, மேலும் பார்வை கோளாறு மங்களான பார்வை போன்ற பிரச்சனைகளை கண்களுக்கு தருகிறது, இப்போது வளரும் குழந்தைகள் கண்கள் பாதிக்கப்பட்டு கண்ணாடி போடுகின்றனர் மேலும் இவர்கள் செல்போன் பார்ப்பது முக்கிய காரணமாக மருத்துவர்கள் கூறுகின்றனர், தொடர்சியாக செல்போன் திரையை பார்ப்பதன் மூலம் இரவு நேரத்தில் தூக்கம் இன்மை மற்றும் மன அழுத்தம் உடல் சோர்வு தேவையற்ற பதட்டம் ஏற்படுகிறது என மருத்துவர் கூறுகின்றனர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பார்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிந்தால் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசிக்கின்றனர்..!!