அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஆடிட்டரிடம் 50 லட்சம் பணத்தை அபேஸ் செய்த கும்பல்..!!

சென்னையில் உள்ள புரசைவாக்கத்தில் சர்ச் லைட் பகுதியை சார்ந்தவர் பவுன் குமார். ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் அதற்காக பணம் முதலீடு செய்வதற்கு தயாராக இருந்துள்ளார் .

இதை அறிந்த சேலத்தை சார்ந்த சங்கர் பிரபு ,திருப்பூரை சார்ந்த கிருஷ்ண பிரகாஷ் உள்ளிட்டோர் பவுன் குமாரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானபொழுது இவர்கள் இருவரும் பவுன் குமாரிடம் வெட்ரா கேபிட்டல்ஸ் வணிக நிறுவனத்தை மைக்கேல் என்பவர் நடத்தி வருகிறார் என்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு தொகைக்கு 15 சதவீதம் வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய ஆடிட்டர் அவர் பணத்தினை முதலீடு செய்ய தயாரானார். அதற்காக சென்னையில் இருந்து திருச்சி வந்த பவுன் குமார் தனக்கு அறிமுகமான சங்கர் பிரபுகிருஷ்ண பிரகாஷ் ஆகியோரிடம்  கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கட்டமாக ரூ  8.50 லட்சம் பணத்தினை கொடுத்துள்ளார்.

அதன் பின்பு தவணை முறையில் ரூ. 10 லட்சம் ரூ 32 லட்சம் என்று மொத்தம் 50 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் தெரிவித்தது போல் முதலீட்டு பணத்துக்கான வட்டியினை வழங்கவில்லை. இது தொடர்பாக பவுன் குமார் அவர்களிடம் கேட்டபோது முதலில் கனிவாக பேசிய இருவரும் பின்னர் அவரை மிரட்ட ஆரம்பித்துள்ளனர். இப்போது தான் பவுன் குமார் தன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் சங்கர் பிரபு மற்றும் கிருஷ்ண பிரகாஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாய் தேடி வருகின்றன. அதிக வட்டி தருவதாக கூறி ஆடிட்டரிடம் பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

இரு காலும், ஒரு கையும் இல்லை..!! தன்னம்பிக்கையால் வென்ற இளைஞர்..!!

Read Next

பிரபல சின்னத்திரை இயக்குனர் ஒ என் ரத்தினத்தின் மனைவி திடீர் தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular