பலருக்கும் எத்தனை முறை குளித்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வீசும். அவர்களுக்கு அருமருந்தாக கிடைத்துள்ளது தான் வெட்டிவேர். குளிப்பதற்கு முன்பாக வெட்டிவேரை நீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரில் குளித்து வர வியர்வை துர்நாற்றம் நீங்கும். வெட்டி வேரை உடலில் தேய்த்து ஸ்க்ரப் போலவும் குளிக்கலாம். வெட்டிவேரை பொடியாக்கி அதை உடலில் தேய்த்தும் குளிக்கலாம். வெட்டிவேரில் இருக்கும் இயற்கையான வாசனை வியர்வை துர்நாற்றத்தை நீக்கி புத்துணர்வை தருகிறது.