
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ. பன்னீர் செல்வம், தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயல். தேர்தல் என்றால் முறையான கால அவகாசத்துடன் உரிய முறையில் நடைபெற வேண்டும். இவை எதுவும் செய்யாமல் பிக் பாக்கெட் அடிப்பது போன்று பதவியை பெற முயற்சிக்கிறார்கள். எதுவுமே முறைப்படி இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். சர்வாதிகாரமாக தேர்தல் அறிவிப்பை அறிவித்துள்ளார்கள். அதிமுகவை மீட்கும் பணியை வேகமாக செய்வோம் என்றார்.