
அதிமுக கட்சியினுள் நடக்கும் பிரச்சனை நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். கட்சிக்குள்ளேயே பல பேர் பிரிந்து கிடக்கின்றனர். மேலும் பணி நீக்கம் கட்சியிலிருந்து விலகுவது போன்ற பிரச்சனைகள் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருக்கிறது. நம் அனைவருக்கும் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இந்த கட்சியில் இருந்து விலகி புதியதாக ஒரு கட்சி ஆரம்பிப்பார் என்று நாம் கணித்திருந்தோம். அந்த வகையில் இப்போது நடந்துள்ளது.
ஓ பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் புதியதொரு கட்சியை எலக்சன் கமிஷனில் பதிவு செய்துள்ளார். மேலும் அதிமுகவின் கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று பாஜகவின் துணைத் தலைவரான அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன், ஜோதிராமன் மூலம் எம் ஜி ஆர் அதிமுக என்ற புதியதொரு கட்சியை பதிவு செய்துள்ளார்.
NDA கூட்டணியில் சேர்க்காவிட்டால் 2026-ல் தனியாகவோ அல்லது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடனும் கூட்டணி சேர்த்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இவரது முடிவிற்கு சிலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். தேர்தல் களம் நெருங்க நெருங்க சூடு பிடித்து வருவது நம் அனைவரின் கண்ணுக்கும் தெரிகிறது.