
இன்று காதில் ரோஜா பூவுடன் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி அவர்கள் பேசியுள்ளார். அப்போது அவர் காதுல பூ வச்சுட்டு இருக்காங்களேன்னு எல்லாரும் பாக்குறீங்களா ?.இந்த பூவ சுத்துனது பழனிச்சாமி தான். இத்தனை நாளும் வீடியோவுக்கும், பொது மக்களுக்கு, எல்லாருக்கும் பழனிசாமி பூ சுத்திட்டு இருந்தாரு.
நானும் ரொம்ப நாளா உங்ககிட்ட சொல்லிக்கிட்டே தான் இருக்கேன். உன்னை யாருய்யா? பொது செயலாளர்னு சொன்னா.. நீயே சொல்லிகிட்ட…. இன்னும் தேர்தல் ஆணையத்துல அங்கீகாரமே கொடுக்கல..தேர்தல் ஆணையமும் இன்னும் சொல்லல.. அதுக்குள்ள எப்ப பாரு பொதுச் செயலாளர்னு ஓதுறது..உடனே சென்னையில் இருந்து நாங்கள் யாரையும் சேர்க்க மாட்டோம் என பேசுவார்கள். நீண்ட நாட்களாக அதிமுக பழனிச்சாமியின் அப்பன் வீட்டு சொத்து போன்ற முத்திரை குத்துகின்றனர்.
ஜெய்சிம்மன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளார். அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணைய ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம் அனுப்பப்பட்டது. இதன் மீது எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அனுப்பியுள்ள கடிதத்தின் மீது நீதி மன்றத்தின் உத்தரவின் படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கொடியை தொடக்கூடாது என பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி உள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுக கொடி உங்களுடையது என்று சொன்னால் தேர்தல் ஆணைய உத்தரவின் படி காணாமல் போய்விடுவீர்கள். தமிழ்நாடு டிஜிபிஐ விரைவில் சந்திக்க இருக்கிறேன். ஓபிஎஸ் அவர்களிடம் அனுமதி பெற்று உள்துறையைச் செயலாளரையும் சந்திக்க உள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுத உள்ளேன். எனவே “சட்டம் என்னவோ அதுதான் இங்கு பேசும்” என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பெங்களூர் புகழேந்தி எச்சரிக்கை கொடுத்துள்ளார்.