அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ..!! ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.!!

சேலத்தில் அதிமுக முக்கிய புள்ளியாகவும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்து வந்தவர் வெங்கடாசலம். அவர் தமிழ்நாடு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “இன்றைய தினம் சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், 50 ஆண்டு காலமாக தமிழக அரசியல் தளத்தில் செயல்பட்டு ஒருவருமான வெங்கடாசலம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொண்டுள்ள ஈர்ப்பால் தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர்கள் கேபி ராமலிங்கம் கரு. நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் தமது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்துள்ள வெங்கடாசலம் மற்றும் அவருடன் பாஜகவில் இணைந்துள்ள அனைவரையும் மனதார வரவேற்று மகிழ்வதோடு,தூயதோர் அரசியலை முன்னெடுக்கும் தமிழ்நாடு பாஜக செயல்பாடுகளில் அவர்கள் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தையும் பங்களிப்பையும் கோருகிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.

2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆயுத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறான தருணத்தில் கட்சி தவால் தொடர்பான விஷயங்கள் நடப்பது  எளிதானது என்றாலும் 50 ஆண்டுகாலம் அரசியல் ஈடுபட்டு வரும் அதிமுக முக்கிய பள்ளி பாஜகவில் இணைந்திருப்பது அதிமுக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

எம்.எல்.ஏ பதவியை இழந்தார் திமுக அமைச்சர் பொன்முடி; ஆட்சியில் குவித்த சொத்தால், அதிகாரத்தில் இருந்தபோதே ஆப்பு.!!

Read Next

பேருந்து சக்கரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண்மணி பரிதாப பலி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular