அதிமுக அரசவையில் செல்வி ஜெயலலிதா இருந்த வரையில் ஆட்சியில் மாற்றமும் தோல்வியும் நிறைந்திருந்தாலும் பெண் ஆளுமையால் அந்த ஆட்சியை வெற்றி கண்டு அத்தனை ஆண்களையும் தனக்கு பின்னால் வைத்து இந்த உலகத்தையே ஒரு பெண்மையால் ஆளப்பட்டது, அந்தப் பெண்ணை மறைந்த பின்பு ஆச்சியே இரண்டாக பிளந்தது, இன்று பிளவு பட்ட ஆட்சி 2026 இல் இருக்குமா இருக்காதா என்ற கேள்வி மக்களிடையே மட்டுமல்லாமல் பல தலைவர்களுக்குள்ளும் கேள்வி எழும்புகிறது அப்படி இழந்த கேள்வி பெங்களூர் புகழேந்தி…
2026 இல் அதிமுக தோல்வி அடைந்தால் தொண்டர்களே அதிமுக தலைவர்களை அடிக்கும் சூழ்நிலை உருவாகும் என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார், பல அதிமுக தலைவர்கள் பாஜகவுக்கு ஜால்ரா தட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார், இதையெல்லாம் நினைத்து பார்த்து அதிமுகவின் அனைத்து அணிகளும் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்துள்ளார் அப்படி ஒன்று சேர்ந்தால் மட்டுமே 2026ல் ஏதோ ஒரு சில இடங்களில் அதிமுக வெற்றி காணும் என குறிப்பிட்டுள்ளார், மேலும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை சசிகலா அழைத்துப் பேச வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார், அதிமுக ஆட்சியில் மாற்றம் வந்தால் வெற்றி நிச்சயம் ஆனால் தோல்வியடைந்தால் தொண்டர்களாலே தாக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்..!!




