சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுகவைச் சார்ந்த சதிஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாநகராட்சியின் 55 வது வார்டு பெண் கவுன்சிலரின் கணவரான சதீஷ் திமுக நிர்வாகி என கூறப்படுகிறது. இந்நிலையில் சதிஷ் உள்ளிட்ட 9 பேரை அதிமுக பிரமுகர் கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர், சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் என்வர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சண்முகத்தின் உறவினர்கள் அவரின் உடலை எடுக்க விடாமல் குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது .
இதற்கிடையே அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டதற்கு கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டணத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைத்துள்ளது என அதிமுக பலமுறை சுட்டிக்காட்டியும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி கண்டணம் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை கைது செய்ய ஐந்து தனிபடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் திமுக நிர்வாகி சதிஷ் உள்ளிட்ட எட்டு பேரை சற்று முன்பு காவல்துறையினர் கைது செய்தனர். திமுக நிர்வாகி சதிஷ் கஞ்சா விற்பணையில் ஈடுபட்டு வந்ததாகவும் அதிமுக நிர்வாகி சண்முகம் போலீசில் இது குறித்து புகார் அளித்ததாகவும் அதனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.