
தேர்தல் நேரம் நெருங்க நெருங்க களம் சூடு பிடித்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த நேரத்தில் கட்சிகள் தனது கூட்டணிகளை தீர்வு செய்து இருக்கின்றனர். அந்த வகையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது நம் அனைவருக்கும் தெரியும். இதுதான் கடந்த வாரம் முதல் ஒரு பேசும் பொருளாகவே இருக்கிறது. ஆனால் இதற்கு மக்களிடையேயும் சரி அதிமுக நிர்வாகிகளிடமும் சரி நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த முடிவிற்கு பிறகு பல பேர் கட்சியை விட்டு நீங்கி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள் அதிமுகவிலிருந்து விலகிக் கொண்டே வருகின்றனர் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அதுமட்டுமில்லாமல் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்களும் விலகிக் கொண்டே வருகின்றனர். சிலர் கட்சியின் மீது பெரும் கோபம் கொண்டிருக்கின்றனர்.
மேலும் நேத்து அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் இதைப்பற்றி வெளிப்படையாகவே பேசி உள்ளனர். அடுத்து அதிமுகவின் சிறுபான்மையினர் அணியின் முக்கிய நிர்வாகியான கே எஸ் முகமது கனி கட்சியை விட்டு விலகுவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது ஒரு பேசும் பொருளாகவே மாறி உள்ளது. அடுத்தடுத்து கட்சியிலிருந்து ஆட்கள் விலகுவதால் பரிதாபமான நிலையில் இருக்கிறது அதிமுக.