
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணியை பற்றி தான் பேசி வருகின்றனர். இதை பலர் கணித்து வந்தாலும் சிலர் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று கூறினார்கள். ஆனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததும் பலர் அதை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியது என்ன என்று இந்த பதிவில் காண்போம்.
அதிமுக பாஜக கூட்டணி நடைபெறும் என்று அனைவரும் முன்பே கணித்தது தான் என்றும் அது இப்போது நடந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் அதிமுக கூட்டணி வைத்து விடக்கூடாது என்பதில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். மிக கவனமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நெருக்கடிகளின் காரணமாக தான் நடந்தது என்று திருமாவளவன் அவர்கள் கூறியுள்ளார். இந்த விவகாரத்தைப் பற்றி பலர் விமர்சித்து வருகின்றனர். இதில் இவரது விமர்சனம் மக்களால் பகிரப்பட்டு வருகிறது.