
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை பற்றி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களும் விமர்சித்து வருகின்றனர். இது கடந்த சில நாட்களாக சூடான தலைப்பாக சுற்றி வருகிறது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்த்து நிற்கின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதையும் நாம் பார்த்தோம். இப்போது அதிமுகவிற்கு அடுத்த சறுக்களாக ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்று இந்த பதிவில் காண்போம்.
அதிமுக கூட்டணியிலிருந்து இந்திய சமூக ஜனநாயக கட்சி வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கட்சியின் தலைவரான நெல்லை முபாரக் அவர்கள் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என்ன காரணம் கூறினாலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கூடா நட்பு கேடாய் முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அறிவித்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் நேற்று இவர் தமிழக முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஆன மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இவரது செயலுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிலர் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.