அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை – அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

நாட்டில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. இந்த மாத நிலவரம் குறித்து பார்க்கலாம்.

சிலிண்டர் விலை:

ஒவ்வொரு ஆண்டும் மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றனர். அந்த வகையில், இன்று (பிப்.1) சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் அடிப்படையில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன் படி, இன்று சிலிண்டர் விலை ரூ.12.50 உயர்ந்துள்ளது. அதனால், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.1937க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றம் இல்லாமல் ரூ. 918.50 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

Read Previous

தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்வு – இன்று (பிப்.1) முதல் அமல்..!!

Read Next

50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத கடன் திட்டம் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular