
போக்ஸோ வழக்கில் மதுரையைச் சார்ந்த இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அதிரடி தீர்ப்பு திண்டுக்கல் மாவட்டம் மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சார்ந்தவர் நாகராஜன் மகன் செல்வம் கடந்த 2020 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள ராமராஜபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்ற பொழுது தனது உறவினரின் மகளான 17 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து சாட்சியங்களை விசாரணை செய்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அந்த தீர்ப்பின் செல்வம் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதிசெய்யப்பட்டது .இதனால் அவருக்கு 23 ஆண்டுகால சிறை தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜி சரண் தீர்ப்பளித்துள்ளார்.