
உக்ரைன் போரை ட்ரம்ப் எப்படி கையாள போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது…
அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் வயது (78) அபார வெற்றி பெற்றுள்ளார், இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்க உள்ளார், அதற்கான வேலைப்பாடுகள் வெள்ளை மாளிகையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன இந்த சூழலில் காசா போர் உக்ரைன் போர் உள்ளிட்டவற்றை சம்ப் எப்படி கையாள போகிறார் என்று எதிர்பார்ப்பு உலக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது, இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை எனது தலைமையிலான அரசியல் முக்கிய பொறுப்பில் அமர வைப்பேன் என்று ட்ரம்ப் கூறி இருந்தார், தற்போது ஷம்பு வெற்றி பெற்றிருக்கும் நிலையில் உக்கிரன் அதிபர் ஜெலன்ஸிகியுடனான தொலைபேசி உரையாடலின் போது எலான் மஸ்கையும் பேச வைத்திருக்கிறார் இந்த உரையாடல் எலான் மஸ்க்கு முக்கிய பதவி உக்கரை ரஷ்யா போரின் முடிவு என இரண்டு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது, ஜெலசியுடன் பேசிய எலான் மஸ்க் உக்கிரேனுக்கு எனது ஸ்டார்லிங்க் நிறுவனம் டிரோன் கண்காணிப்பு உள்ளிட்ட சாட்டிலைட் தொழில்நுட்ப உதவிகளை விரிவுபடுத்தும் என்று உறுதி அளித்துள்ளாராம் இந்த மூன்று பேரின் உரையாடல் சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது…!!