அதிர்ச்சி.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கல்லாலே அடித்து கொடூரமாக கொலை செய்த தாய் மற்றும் மகன்..!! தீவிர விசாரணை.!!

ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் நடேசன் -ஜெயலட்சுமி தம்பதியினர். நடேசன் காவல்துறையில் எஸ் ஐ ஆக பணிபுரிந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடேசன் ரெட்டிபாளையம் வெள்ளக்காரட்டில் தனக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவ்வப்போது இவரது பக்கத்து தோட்டத்தை சார்ந்த மசிரியம்மாள் என்பவருக்கும் நடேசனுக்கும் வண்டி பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்ததுங‘

இதனால் இந்த பிரச்சனை தொடர்பாக வழக்கு அந்தியூர் உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. மேலும் விவசாய விலைப் பொருள்களைக் கொண்டு செல்ல நடேசனுக்கு கடந்த மாதம் தற்காலிக உத்தரவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த உத்தரவின் படி பொது பாதையை சீரமைக்கும் பணியில் நடேசன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்தால் மசிரியம்மாள்  மற்றும் அவரது மகன் தமிழரசன் ஆகியோர் நடேசன் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கற்களை எடுத்து நடேசனை அவர்கள் இருவரும் கடுமையாய் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் நடேசன் நிகழ்வடத்திலேயே பரிதாபமாய் உயிர் இழந்தார்.

இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த நடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கொலைக்கு காரணமான மசிரியம்மாள்  மற்றும் அவரது மகன் தமிழரசன் ஆகியோரை தீவிரமாய் தேடி வருகின்றனர்.

Read Previous

பட்டப்பகலில், நடுரோட்டில் ரௌடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை..!! துள்ளத்துடிக்க சுற்றிவளைத்து நடந்த பயங்கரம்.!!

Read Next

என்னம்மா யோசிக்கிறாங்க.. பறவை, குரங்கை விரட்ட புது ஐடியா; விவசாயி புதிய முயற்சி..!! வைரல் வீடியோ உள்ளே.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular