கணவரின் மரணத்தை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தனது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில், யலஹங்கா ஆரம் இசட் அடுக்குமாடி குடியிருப்பில் புலிவர்த்தி ஸ்ரீதர் (வயது 47) ரம்யா (வயது 40) தம்பதிக்கு மகளும், பார்கவ் (வயது 13 )என்ற மகனும் உள்ளனர்.
ஸ்ரீதர் மூன்று மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் இறந்தார். இதனால் மணமுடைந்த ரம்யா மகனுடன் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார். பெங்களூருவில் யலஹங்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளனர்.