கர்நாடகாவில் கணவன் தலை மீது மனைவி கல்லை போட்டு கொலை செய்துவிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா: பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமந்த் என்பவர் வேலைக்கு போகாமல் மதுவுக்கு அடிமையாகி மனைவியுடன் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார். நேற்றிரவு (ஜன. 01) இருவருக்கும் சண்டை முற்றிய நிலையில் இன்று (ஜன. 02) காலை ஸ்ரீமந்த் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற சாவித்ரி உடலை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசியதாக கூறப்படுகிறது. போலீசாரின் துரித விசாரணையை தொடர்ந்து சாவித்ரி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.