
திருப்பத்தூர் மாவட்டம் பூனைக்குட்டைபள்ளம் பகுதியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர், சக ஆசிரியையிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் பூனை குட்டை பள்ளம் பகுதியில் அரசினர் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் சுப்பிரமணி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி ஆசிரியை ஒருவரை தன் அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. தனி அறைக்கு அழைத்துச் சென்று தகாத முறையில் ஈடுபட்டதாக அந்த ஆசிரியை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து தனது உறவினர்களுடன் அந்த பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமையாசிரியர் சுப்பிரமணியின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.