11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக் கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் புறநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறுமி (17 வயது) 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று (ஜூலை 3), வகுப்பறையில் இருந்தபோது, கழிவறைக்குச் சென்ற அவர், பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த சம்பவம் குறித்து கோலார் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.