
பாகிஸ்தானில் இந்து கோவில் மீது ராக்கெட் குண்டு வீச்சுபாகிஸ்தானில் இந்து கோவில் மீது ராக்கெட் குண்டு வீசிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்னும் பெண் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது பப்ஜி காதலனை தேடி சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவிற்கு நுழைந்து நேபாளத்தில் திருமணம் செய்து கொண்டு இந்தியாவிலேயே வாழத் தொடங்கிவிட்டார். சீமா பாகிஸ்தானுக்கு போக மாட்டேன் இந்தியாவில் தான் இருப்பேன் என உறுதியாக கூறியிருந்தார். அதனை அடுத்து இந்தியாவில் தனக்கு குடியுரிமை வேண்டும் என மோடியிடம் கோரிக்கையும் விடுத்திருந்தார்.
இதனிடையே சீமாவின் இந்திய பிரவேசம் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல்களிடமிருந்தும் மிரட்டல் வந்திருந்தது.
இந்த நிலையில் சிந்து மாகாணம் காஷ்மோ நகரில் உள்ள இந்து கோவில் மீது நேற்று ராக்கெட் குண்டுகளை வீசி மர்ம நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்ட வசமாக யாரும் காயமடையவில்லை.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.