தந்தையே தனது மகனின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வைரல் ஆக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் 18 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் தன் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில் அவருடைய தந்தை அவரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கியுள்ளார். இது தொடர்பாக பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தன் மகள் ஒரு வாலிபரை காதலித்து வந்தார் . இது என் கணவனுக்கு பிடிக்கவில்லை அதனால் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்து துன்புறுத்தினார்.
பின்பு அந்த வாலிபரின் செல்போனிலிருந்து தன் மகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது கணவர் அவருடைய செல்போனில் டவுன்லோட் செய்தால் பின்னர் தன் மகள் காதலித்தது பிடிக்காததால், தன்னுடைய மகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு அதை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கிவிட்டார்.
இதனால் வேதனை தாங்காமல் தனது மகள் பினாயில் குடித்து தற்கொலை செய்ய முயன்றார் எனவும், தனது கணவர் தொடர்ந்து மகளையும் தன்னையும் அடித்து துன்புறுத்துவதாகவும் அந்த மகளின் தாயார் காவல்துறையில் கூறிய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். தன் சொந்த மகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தந்தையே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதை வைரல் ஆக்குவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.