
அரியலூர் மாவட்டத்தில் தனது சொந்த பேத்தியை பாட்டியே வாயில் மணல் திணித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜா என்பவர் அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர். இவர் வேலைக்காக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் சந்தியா வயது 21 என்ற மனைவியும் மோனிஷ் (வயது 2), கிருத்திகா ( வயது 1), என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குழந்தை கிருத்திகா வாயில் மணல் திணிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இது குறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் அவரின் மாமியார் விருத்தம்பாளை (வயது 60) போலீசார் பிடித்து விசாரித்த நிலையில் மருமகள் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் ஆத்திரம் அடைந்து தனது பேத்தியை கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.