
தமிழகத்தில் வெப்ப அலையால் இந்த ஆண்டு 12 பேர் மரணம் அடைந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்தாண்டு வெப்ப அலை காரணமாக 264 பேர் மரணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் வெப்ப அலையால் 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 120 பேர், குஜராத்தில் 35 பேர், தெலங்கானாவில் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும், 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மரணங்களில் எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது.