அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர்; பாலத்தில் இருந்து கீழே விழுந்து 2 இளைஞர்கள் மரணம்..!! அதிர்ச்சி காட்சிகள் உள்ளே.!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகரில் என்ஏடி  மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் நேற்று இரவு ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சாலையில் அதிவேகத்தில் வருகை தந்த இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் பயணம் செய்துள்ளனர்.அmந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் பக்கவாட்டில் மோதியது. இதனால் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்களின் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிர் இழந்தனர். அதில் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த இரண்டு இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விசாகப்பட்டினம் ஆரவல்லி பகுதியை சார்ந்த இளைஞர்கள் தனவரவு குமார் மற்றும் பவுன் குமார் இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் ஒரு சேர இருசக்கர வாகனத்தில் பயணித்த நிலையில் மேம்பாலத்தில் அதிவேகத்தில் வந்த போது  வாகனத்தை திருப்ப இயலாமல் விபத்து ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது, இதுதன் வீடியோ காட்சி  சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Read Previous

வளர்ப்பு மகளை 6 மாதமாக மிரட்டி சீரழித்த தந்தை..!! கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து நடந்த பயங்கரம்.!!

Read Next

திருமண ஊர்வலத்தில் கரிக்கட்டையான மணமகன்..!! ஆவலுடன் காத்திருந்த மணப்பெண்ணுக்கு தீயாய் சென்ற துக்க செய்தி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular