
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான திரைப்படம் “தண்டேல்”. கடல் எல்லையில் மாட்டிக்கொண்ட மீனவர்களை பற்றிய உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பினால் இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது பற்றி கீழே காணலாம்.
அதாவது, தண்டேல் படத்தின் ஓடிடி உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படம் வரும் மார்ச் 14ம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தை ஓடிடியில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.