அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் முழு மகிழ்ச்சி அடைகிறேன் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்..
1972-ல் தலைவர் கலைஞர் இத்திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என்று மும்முரமாக முயற்சித்தார், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பல ஆட்சி மாற்றங்களும் பல ஏற்ற இறக்கங்களையும் கடந்து வந்ததால் அதனை அன்று கலைஞரால் செய்ய முடியவில்லை, ஆனால் அவர் நினைத்த திட்டத்தை இன்று ஆகஸ்ட் 17 நான் தொடங்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், இத்திட்டமானது ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு வளம் சேர்க்கும் வகையில் இத்திட்டம் பயன்படும் என்று முதலமைச்சர் தனது X-தளத்தில் பதிவிட்டுள்ளார்..!!