
#அத்தை என்றால் யாருக்குதான் பிடிக்காது..? நான் சொல்வது என் அப்பா உடன் பிறந்த சகோதரியை.
நாம் அனைவரும் அம்மாவின் மடியை விட அத்தையின் மடியில்தான் அதிகமாக வளர்ந்து இருப்போம்,அத்தை என்பவள் அம்மாவிற்கு சமம்.
அதனால் தான் பெரும்பாலான அத்தைகள் தன் அண்ணன்/தம்பி பசங்களுக்கு தன் பெண்ணை திருமணம் முடித்து வைக்கின்றனர் அல்லது பொண்ணை தன் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்,காரணம் தன் வளர்ப்பு தப்பாக இருக்காது என்று எண்ணி.
அதே போல பசங்க/பொண்ணுகளுக்கு தன் அத்தையை பிடிக்கும் என்பதால் அவர்களின் குழந்தைகளையும் பிடித்துவிடுகிறது.
இந்த கணக்கு என்றும் பொய் ஆனதில்லை..!
சொந்தம் என்றும் தொடர அத்தை பையன்,மாமா பொண்ணு / அத்தை பொண்ணு ,மாமா பையன் ஜோடி எப்பவும் சூப்பர் தான்.
இந்த கல்யாண வாழ்க்கையில் எப்பவும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து போறது,சகிப்பு தன்மை,காதல் மற்றும் பொறுப்பு அதிகமாக இருக்கும்,பெற்றோர்கள் தரப்பும் ஆதரவு இருக்கும்.
அதை மீறியும் பிரச்சனை வந்தாலும்,இழுத்து பிடிச்சு வாழ்கை ஓடிரும்.
அட அது நம்ம அத்தை பொண்ணு, சின்ன புள்ள எல்லாம் காலப்போக்குல சரி ஆயிரும்.
அட நம்ம மாமா தான திட்டுனாறு,எதோ கோவத்துல இருந்துருபாறு போல அதான் ஒரு அடி அடிச்சுபுட்டாரு.எல்லாம் சரி ஆயிரும்.
இந்த பக்குவம் எடுத்தேறியா பொண்ணு/மாப்ள எடுத்தா கிடைக்காது.
இன்று பெரும்பாலன விவாகரத்துக்கு காரணம் அவர்களின் பெற்றோர்கள்தான்.இந்த சொந்தத்தில் அமைந்த வாழ்கையில் அந்த பிரச்சனையே கிடையாது.
சில சமயம் தோணும்,சின்ன பிரச்சனை வரும்போது.நாம வெளிய கல்யாணம் பண்ணிருக்கலாம் என்று,வெளிய கல்யாணம் பண்ணியவர்களை கேட்டுப்பாருங்கள்.அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியும்.
என்றும் உங்கள் திருமண வாழ்கைக்கு முதல் உரிமை உங்கள் அத்தை மற்றும் மாமன் வீட்டிற்கு கொடுங்கள்,நிறைய படிக்கல,சரியான வேலை இல்லை,வசதி இல்லை என்று தட்டி கழிக்காதீர்கள்.பிறகு உங்கள் பிள்ளைகளின் வாழ்கை சிலரால் தட்டி கழிக்கப்படும்.