உடல்நிலை பரிசோதனை செய்வதற்காக பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் துணை முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான அத்வானி கடந்த ஜூன் 26 ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
பாஜக கட்சியின் மூத்த தலைவர் அத்வானிக்கு 96 வயது என்பதால் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவு தான் என்று எய்ட்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்தனர். முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு சிறுநீரகவியல் மருத்துவத்துறை சார்ந்த சிறப்பு மருத்துவர் நிபுணர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை முடிந்து பூரணமாக குணமடைந்து அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தனது உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்வானி தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.