
அந்தமானில் தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டிய பிரதமர்..!!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள தேசிய நினைவகத்தின் மாதிரியை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரையும் சூட்டியுள்ளார். இந்த 21 தீவுகளுக்கு இன்று பெயர் சூட்டியதன் மூலம் இந்தியா ஒரே பாரதம் என்பதை குறிப்பதாகவும், நமது ஆயுதப்படைகளின் வீரத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.