அந்தரத்தில் தொங்கும் ரயில்வே தண்டவாளம் (வீடியோ)..!!

தென் தமிழகத்தில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இந்நிலையில் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு புறப்பட்ட ட்ரை வீக்லி விரைவு ரயில் தாதன்குளம் அருகே வந்தபோது வெள்ளப்பெருக்கினால் தண்டவாளத்தின் அடித்தளம் அடித்து செல்லப்பட்டது. இதனையடுத்து ரயிலில் பயணித்த 300 பேர் ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 500 பேர் இதுவரை ரயில் பெட்டியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

முழங்கால் வலி குறைய இந்த ஆசனத்தை செய்யுங்க..!!

Read Next

“மக்களுடன் முதல்வர்” திட்டம்.. சேலத்தில் தொடங்கி வைத்த உதயநிதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular