அனைத்து ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு முக்கியமான பதிவு பெண்களைப் பற்றி..!!

♥சிந்தியுங்கள் உங்கள் தோழியாய்…!!!

♥ அவளுக்கு அலுவலகம் முடிய தாமதமாகிவிட்டது. நடு ராத்திரியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள். மனது ஒரு வித பயத்துடனே இருந்தது.

♥அப்போது பின்னால் இருந்து ஒரு சத்தம், இதயம் ஒரு நொடி நிற்க… திரும்பி பார்த்தால் அவளுடைய மேனேஜர். “ ஹேய் என்ன இங்க நிற்கிற, பயப்படாதே நான் உன்னை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். நீ என்னுடன் பணி புரியும் பெண். நீ என் பொறுப்பு” என்று சொல்லி அங்கே வந்த ஆட்டோவில் அனுப்பி வைத்தார். ஆட்டோ நகர்ந்தது.

♥ஆட்டோ கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்த சாலையில் பயணமானது. ஆட்டோக்காரர் கேட்டார் “ஏம்மா இவ்வளவு நேரமா வேலை செய்வீங்க” பணத்தை விட உயிர், மானம் பெரிதில்லையா…. என்று கூற , ஒரு பதட்டத்தோடு ஆம் முக்கியமான வேலை என்று சொல்ல இதயத்துடிப்பு அதிகமானது.

♥தான் போக வேண்டிய இடம் நெருங்கியதும் ஆட்டோவை நிறுத்த சொன்னாள். அதற்கு அப்பால் ஆட்டோ போக பாதை இல்லை. ஆட்டோக்காரர் உடனே “கொஞ்சம் இரும்மா பயப்படாதே, அந்த தெரு முனையில் விடுறேன். என் ஆட்டோவில் வருகின்றாய். நீ என் பொறுப்பு” என்று சொல்லி தெரு முனையில் இறக்கிவிட்டார்.

♥ இறங்கி இரண்டு அடி கூட நடக்கவில்லை அதற்குள் ஒரு 45 வயது மதிக்க தக்க ஒருவர் வாயில் சிகரெட்டுடன் காட்சியளித்தார். இந்த முறை கிட்டத்தட்ட இதயம் முழுதாக நின்றுவிடும் போல் ஆக….

♥அவர் சட்டென சிகரெட்டை தூக்கி போட்டுவிட்டு “இங்க வாம்மா நீ தபால்காரர் பொண்ணு தானே? வா நான் உன்னை பாதுகாப்பாக கொண்டு போய் வீட்டில் விடுறேன் என்றார். வீட்டு வாசல் வரை சென்று விட்டு வந்தார்…

♥கடைசிவரை அந்த பெண்ணுக்கு ஏதும் ஆகலை. ஆனால் இதை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் நம் இதயம் படபடத்தது. இல்லையா…?

♥இப்படித்தான் நம் பெண்களை கண்களாக பல ஆண்கள் பாதுகாக்கிறார்கள்…. ஆனால் ஒரு சில கெட்ட கிருமிகள் போன்ற ஆண்களால் தான் ஒட்டுமொத்த ஆண்களையும் பெண்கள் நம்ப தயாராக இல்லாமல் பயப்படுகிறார்கள்…

♥இது தான் நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பின் நிலை என்பதை மறுக்க முடியாது தானே? நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பும் நம் பொறுப்பு என ஒவ்வொரு ஆண்களும் நினைக்க வேண்டும்.

♥சாலையில் தனிமையில் நடக்கும் ஒரு பெண் யாரோ ஒருவரின் மகளாக, அக்காவாக, தங்கையாக, அம்மாவாக, மனைவியாக, காதலியாக தானே வாழ்ந்து கொண்டு இருக்க முடியும். நம் குடும்பம் போல்…

♥ ஒரு பெண்ணிடம் கன்னியமாக நாகரீகமாக பழகிப்பாருங்கள்… உங்களுக்காக அவள் நெருப்பாற்றைக்கூட கடப்பாள்…

 

Read Previous

காரியம் (சிறுகதை).. கண்களில் நீரை வர வைக்கும் அருமையான சிறுகதை..!!

Read Next

உங்களை ஒருவர் அலட்சியப்படுத்தினால் அவரை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் தெரியுமா? படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular