அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா? அப்பொழுது இவ்வாறு குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்..!!

நாம் அனைவரும் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் முதலில் அங்குள்ள விநாயகரை வழிபட்ட பின்பு தான் கோயிலில் உள்ள மூலவரை வணங்க செல்வோம். அதுபோல  நமக்கு எந்த ஒரு தெய்வத்தின் ஆசி வேண்டும் என்றாலும் முதலில் நமது குலதெய்வத்தின் ஆசியை பெற வேண்டும். நம் முதலில் வழிபட வேண்டியது குலதெய்வத்தை தான் என்கிறார்கள் ஆச்சரிய பெருமக்கள்.

இஷ்ட தெய்வம் என்பதோ, பரிகார தெய்வங்கள் என்பதோ நமக்கு பலன்களை கொடுக்க வேண்டும் என்றால் நாம் மறக்காமல் முதலில் நமது குலதெய்வத்தை வணங்க வேண்டும், அப்பொழுதுதான் எந்த தெய்வங்களாக இருந்தாலும் நமக்கு நன்மையை செய்யும் என்று கூறுகின்றனர், குலதெய்வம் என்பது புராண  தொடர்பு கொண்ட தெய்வங்களாக பெரும்பாலும் அமைவதில்லை, குலதெய்வம் என்பது நம்மை போலவே வாழ்ந்த நம்முடைய முன்னோர்களையும், நம் பூர்விகத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள், அவர்களை ஏன் குல சாமிகளாக போற்றி வழிபட்டு வருவதால் வழக்கமாய் கொண்டுள்ளோம்,

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு தருணத்தையும் மகான்கள்  சித்திரபுருஷர்களும் வலியுறுத்திக்கொண்டே தான் வருகின்றனர். மதுரை வீரன், கருப்பசாமி, குழுமாயி அம்மன், செல்லியம்மன் முதலான தெய்வங்கள் எல்லாம் எப்போதோ வாழ்ந்தவர்கள் என்று மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள் என்றும் ஆய்வாளர்கள்  தெரிவிக்கின்றனர். குலதெய்வ கோவிலுக்கும் மாதத்திற்கு ஒருமுறை எனும் சென்று தரிசிக்க வேண்டும். அம்மாவாசை ,பௌர்ணமி முதலிய சிறப்புமிக்க நாட்களில் மறக்காமல் குலதெய்வ வழிபாடு செய்வது நம் குலத்தை செழிக்க வைக்கும் குலதெய்வ கோயிலுக்கு நம்மால் முடிந்த அளவு ஏதேனும் திருப்பணிகளை செய்ய வேண்டும். நம் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திடம் சொல்லி வழிபட்டு அதனை வழிபடுவதை வழக்கமாய் கொண்டு இருக்க வேண்டும்.

குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதை முறையே செய்து வர வேண்டும். குலதெய்வத்தை வணங்கி வழிபட்டு வருவோம் நம் குலத்தை கண்ணே போல் காத்திருவார்கள் குலதெய்வங்கள். குலதெய்வத்துக்கு படையலிட்டு பிரார்த்தனை செய்வோம். சகல பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் தந்தருளும்  குலதெய்வ வழிபாடு செய்வதால் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்கு பரிபூரணமாய் கிடைக்கும்.

Read Previous

அடிக்கடி உங்கள் போனை வைத்து இடத்தை மறந்து விடுகிறீர்களா..? இந்த பதிவு உங்களுக்காக தான்..!!

Read Next

புதன் கிரகத்தால் பண மழையில் நனைய உள்ள ராசிக்காரர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular