உணவே மருந்து..!! நம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் உணவு பழக்கம் பழமொழி வடிவில்..!! மக்களை கண்டிப்பா இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!
உணவே மருந்து என்று நம் பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள். ஆம் நம் சமையலில் உள்ள அனைத்து பொருட்களிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது அதைப்பற்றி தற்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
1. சீரகம் இல்லா உணவு சிறக்காது.
2. தன் காயம் காக்க வெங்காயம் போதும்.
3. வாழை வாழவைக்கும்.
4. அவசர சோறு ஆபத்து உண்டாக்கும்.
5. இறப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.
6. ரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரை.
7. இருமலைப் போக்கும் வெந்தயக்கீரை.
8. உண்ணா நோன்பு ஆயுளை கூட்டும்.
9. உஷ்ணம் தவிர்க்க கம்மங்களி.
10. கல்லீரல் வளம் பெற கொய்யாப்பழம்.
11. கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை.
12. சித்தம் தெளிய வில்வம்.
13. சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி.
14. சூட்டை தணிக்க கருணைக்கிழங்கு.
15. ஜீரண சக்திக்கு சுண்டக்காய்.
16. தலைவலி நீங்க முள்ளங்கி சாறு.
17. தேனுடன் இஞ்சி ரத்த தூய்மை.
18. பூண்டில் இருக்கும் பென்சிலின் சக்தி.
19. மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.
20. வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.
21. வாத நோய் தடுக்க அரைக்கீரை.
22. வாய் துர்நாற்றம் நீங்க ஏலக்காய்.
23. பருமன் குறைய முட்டைக்கோஸ்.
24. பித்தம் தணிக்க நெல்லிக்காய்
25. குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை.
இந்த மாதிரி நமக்கு ஏற்படும் அனைத்து ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும், நமக்கு வரும் நோய்களுக்கும் மருந்து நம் வீட்டில் சமையல் அறையிலேயே உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு உணவு அருந்துவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை நாம் வாழ முடியும்.




