கலவை சாதங்கள் என்றால் பலருக்கு பிடிக்காது. ஆனால் அந்த சாதங்களில் நன்மை அதிகமாகவே கிடைக்கும். அனைவரும் விரும்பி சாப்பிட கேரட் சாதத்தை இப்படி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
துருவிய கேரட் – 1 கப்,
துருவிய தேங்காய் – 1 கப்,
பச்சை மிளகாய் – 1,
பெரிய வெங்காயம் – 2,
இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு,
வேர்க்கடலை – 5 ஸ்பூன்,
கருவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்.
செய்முறை:
ஒரு கடை எடுத்து எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் ஆகியவற்றை நன்றாக வதக்கிக் கொள்ளவும். வேர்க்கடலை இஞ்சி பூண்டு விழுது கேரட் ஆகியவற்றை சேர்க்கவும். அடுத்ததாக சாம்பார் பொடி கரம் மசாலா சேர்த்து வதக்கி தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
அதனுடன் பாதிக்கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அரிசி எடுத்து கொதிக்க வைத்து தண்ணீரில் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான கேரட் சாதம் தயார்.




