
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான பாட்டி வைத்தியங்கள்:
நெஞ்சு சளி தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்ந்து நன்கு சுட வைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சொற்கள் இரண்டு லவங்கம் சேர்ந்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல் எடுத்தால் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை இஞ்சி சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
வயிற்று வலி இருந்தால் வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து ஊரில் குடிக்க வயிற்று வலி சரியாகும்.
மூக்கடைப்பு இருந்தால் ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்ட காய்ச்சி பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.