Oplus_16908288
அன்பின் தீவிரத்தை ஆண்களால் எட்டவே முடியாது.
அது பெண்களுக்கே உரியது..!!
இவளின் இத்தனை அன்பிற்கு அப்படி என்ன செய்தேன் என்றும் அவனுக்கு தெரியாது, என்ன செய்யவேண்டும், என்றும் தெரியாது..!!
வெறுப்பின் தீவிரத்தையும் அவளால் மட்டுமே எட்டமுடியும். எல்லையற்ற அன்பை சொகுசாக அனுபவித்து பழகிய ஆண்மனம் வெறுப்பிற்கு பயந்து நடுங்கி நடுக்கத்தை மறைக்க அவளைத் தூற்றும், குற்றம் சொல்லும்..!!
ஒரு பெண் விரும்பிக் கொண்டேஇருக்கவேண்டும் என்று நினைப்பது அவளை துன்புறுத்துவதற்கு சமம். அவளின் கோபங்களை ஏற்றுக்கொள்வதும் வெறுக்க அனுமதிப்பதும் தானே அன்பின் படிநிலைகள்..!!
வெறுப்பு என்றதும் உறவை உடைத்து பிரிதலுக்கு செல்லுதல் மட்டுமே என்று எண்ணவேண்டாம். இணைந்து இருக்கும் போதுமே அவளுடைய கோபங்கள் மீது எவ்வளவு மரியாதை தருகிறோமோ அவ்வளவு விரும்புகிறோம் என்றர்த்தம்..!!
அன்பிற்கு எதிர்விளைவு இல்லாத போதுகூட அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவள் கோபத்திற்கு மதிப்பில்லாத போது தன்னுடைய இருப்பு குறித்து ரொம்பவுமே கேள்விக்குள்ளாகிறாள்..!!
அவளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் அவளுடைய வெறுப்பையும் கோபத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்..!!
அவற்றிற்கு மதிப்பளிக்காமல் அவளை எவ்வளவு விரும்பினாலும் போற்றினாலும் எல்லாம் வீண்..!!!




