
அன்னை தெரசாவை அறியாத உலகமே இல்லை அன்னை தெரசா என்றால் அன்பு ஆதரவு பாசம் பரிவு இரக்கம் இவையெல்லாம் அடங்கிய ஒரு இதயம் தான் அன்னை தெரசா..
அன்னை தெரசாவின் ஒரு நாள் பயணத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக கொல்கத்தாவில் உள்ள ஒரு வீதியில் நிதி திரட்டி கொண்டிருந்தார் அன்னை தெரசா, ஒரு செல்வந்தரிடம் அன்னை தெரசா கைநீட்டி நிதி கேட்டிட அந்த செல்வந்தர் அன்னை தெரசாவின் கையில் காரி உமிழ்ந்தார், அன்னை தெரசா ஒரு வார்த்தையும் பேசாமல் கையைத் துடித்துக் கொண்டு மீண்டும் கை நீட்டி நீங்கள் உமிழ்ந்ததை நான் பெற்றுக் கொள்கிறேன் இந்த குழந்தைகளுக்காக ஏதாவது ஒன்று தாருங்கள் என்றார் அந்த செல்வந்தர் எண்ணற்ற பணத்தை அள்ளி அன்னை தெரசாவின் கையில் தந்து விட்டு தான் செய்த தவறை மனம் உருகி வருந்தி சென்றார், அன்னை தெரசாவின் அமைதியோ எல்லையற்றது அவரின் அன்பு எல்லைக்குள் அடங்காது அதனால்தான் இன்றும் அன்னை தெரசாவாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் எல்லோரின் மனதிலும்..!!