கோபத்தின் கதை..!!
ஒரு நாள் ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. இதனை கவனித்த அவனுடைய அப்பா ஒரு நாள் அவனுக்கு சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார். அவன் அப்பா எதுக்கு இப்போது நம்மிடம் சுத்தியலும் ஆணிகளையும் கொடுக்கிறார் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க. அப்பா சொன்னார் இனிமேல் கோபம் வரும்போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார். அந்த இளைஞனும் கோபம் வரும் போதெல்லாம் ஆணி அடித்தான். முதல் நாள் 10 ஆணி, மறுநாள் ஏழு, பின்பு 5 ஆணி, பின்பு ரெண்டு ஆணி என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்து கொண்டே வந்தது. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி மட்டும் அடித்தான். மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி எனக்கு கோபம் வராது என்று அந்த இளைஞன் அவனுடைய அப்பாவிடம் கூறினான். அதற்கு அப்பா சொன்னார் இனிமேல் கோபம் வராத நாட்களில் எல்லாம் ஒவ்வொரு ஆணியாக பிடுங்கி விடு என்று கூறினார். 45 நாளிலே அடித்த ஆணிகள் எல்லாம் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் தன் அப்பாவை அழைத்து காட்டினான். உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கி விட்டாய், சுவற்றில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய்..?? என்று கூறினார். அப்பா கூறினார் உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்க அல்லவா..?? அதற்கு என்ன செய்வாய் என்று அப்பா கூறினார். அந்த இளைஞன் பதில் தெரியாமல் தலை குனிந்தான். இது அந்த இளைஞனுக்கு மட்டும் அல்ல நம்மில் பலருக்கும் பொருந்தும். கோபத்தை குறைத்து அனைவரிடமும் அன்பை செலுத்துவோம் என்பதை உணர்த்தும் இந்த கதையை கட்டாயம் படித்துவிட்டு பகிருங்கள்.




