இன்றும் நம்மில் பலர் ஏதாவது ஒரு இடத்திற்கு செல்லும் போதோ இல்லை நல்ல விஷயங்களை செய்யும்போதோ பூனையை பார்த்தாலும் பூனை நம்மை கடந்து சென்றாலும் அந்த சகுனத்தை அபசகுணமாக கருதுவோம்.
அப்படி இருக்கையில் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் பேக்லேலே என்ற கிராமத்தில் பூனையை கடவுளாக வழிபட்டு வருகிறார்கள், பூனைக்கு கோயில் கட்டி ஆண்டுதோறும் விழாவும் நடத்தி வருகிறார்கள் இந்த வழக்கத்தை நூறு வருடங்களாக அந்த கிராம மக்கள் கடைப்பிடித்து வருவதாகவும், தீய சக்திகளிடமிருந்து காக்க மங்கம்மா என்ற பெண் பூனையை தெய்வமாக அக் கிராம மக்கள் கும்பிட்டு வருகிறார்கள்..!!