
அப்பாவின் சொத்தில் மகளுக்கு பங்கு கொடுக்கத் தேவையில்லை என்று ஏன் நம் முன்னோர்கள் கூறினார்கள் தெரியுமா..??
பெண்களை விட்டுவிட்டு அண்ணன் தம்பிகள் தந்தையின் சொத்தில் பாகம் பிரித்துக் கொள்வார்கள் அதன் பிறகு அவர்கள் பங்காளிகள் மட்டுமே இவர் வீட்டு விசேஷத்திற்கு அவரும் அவர் வீட்டு விசேஷத்திற்கு இவரும் போய் கலந்து கொள்வதோடு சரி மற்றபடி கொடுக்கல் வாங்கல்கள் எதுவாக இருந்தாலும் அது கணக்கில் வைக்கப்படும் பின் வசூலிக்கப்படும் சமயங்களில் வட்டியுடன் ஆனால் பெண்களுக்கு சொத்தில் எதுவும் கொடுப்பதில்லை. மாறாக திருமணத்திற்கு சீர்வரிசை சிறப்பாக செய்வார்கள் நகை நட்டு பாத்திரம் வாகனம் ரொக்கம் என இந்த பட்டியல் நீளம் பாகம் பிரித்தால் கிடைக்கும் சொத்தின் மதிப்பை விட இந்த சீர் சனத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும். அதோடு விடுவது இல்லை சீமந்தம் பிள்ளை பேறு பெயர் சூட்டுதல் தொடங்கி அந்த பெண்ணின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் ஆகும் வரையில் தாய்மாமன் சீர் என்ற பெயரில் குடலை அறுத்தாவது கொடுத்தே ஆக வேண்டும் அந்த உடன் பிறந்த சகோதரியின் மரணம் வரை உடன் பிறந்தவன் கூடவே வரவேண்டும். எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் பாகம் பிரித்திருந்தால் போயிருக்கக் கூடிய சொத்தின் அளவைவிட பன்மடங்கு வந்திருக்கும் .பெண்ணிற்கு இதை எந்த ஆணும் கணக்கு பண்ணி பார்த்து இல்லை இல்லை நான் எனக்கு கிடைத்த சொத்தின் அளவைவிட கூடுதலாக உனக்கு கொடுத்துவிட்டேன். இனிமேல் செய்ய முடியாது என்று சொல்வதில்லை இவன் கடன் வாங்கியோ தமக்கு கிடைத்த சொத்தை விட தங்கையின் அக்காவின் நலனுக்காக அவர்களது தேவையை பூர்த்தி செய்வான். நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழி தான் சீர் சனத்தை எல்லாம் அப்படி பாகமாய் சொத்தை பிரித்து கொடுத்துவிட்டால் அந்த பெண் ஆதரவற்றுப் போவாள்.