
உலக பணக்காரரான எலன் மஸ்க் சொந்தமான ஆக்ஸியம் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்கள் விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைக்கும் நோக்கத்தோடு விண்வெளி வீரர்களை விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக நாசாவுடன் செய்யப்பட்ட வணிக ஒப்பந்தத்திற்கு கீழ் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை ஃபுளோரிடா மாகாணத்தின் மெரிட் தீவில் உள்ள கென்னடி ஏவு தளத்திலிருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் நான்கு வீரர்களை விண்ணில் செலுத்தி உள்ளது. ஆக்ஸியம் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ரெண்டு என்ற பெயரில் விண்ணுக்கு செல்லும் இந்த குழுவில் ஓய்வு பெற்ற மூத்த விண்வெளி வீரர் பெக்கி விட்சன் ,அமெரிக்கா பைலட் ஜான் மற்றும் சவுதி அரேபியா விஞ்ஞானிகள் மற்றும் ராயினர் ஷோபினர் அடங்குவார் இதில் அரேபிய விஞ்ஞானிகளான அலி அல்கர்னி,ரயானா பர்னா அடங்குவர். இதில் ரயானா பர்னாவில் சவுதி அரேபியாவில் இருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார் .மேலும் இந்த குழு இருபதுக்கும் மேற்பட்ட விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடுவார்கள் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.