ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்க பள்ளி மீது கடந்த பிப்.28-ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 165-ஆக உயர்ந்துள்ளது. பிஞ்சுயிர்களை பலிவாங்கியுள்ள இந்த துயர சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, போர்க்குற்றங்கள் குறித்த கடுமையான விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.




