
கடந்த சில நாட்களாக அமெரிக்கா பற்றியும் அமெரிக்க அதிபர் டிரம்பை பற்றியும் தான் அதிகமாக நாம் பேசி வருகிறோம். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து பல நடவடிக்கைகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தி வருகிறார். இதனால் பல நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் சொந்த நாட்டு மக்களே பாதிப்படைய காரணமாகியுள்ளார் டிரம்ப். இவரது செயல்களால் ஐ போன் கம்பெனி 500 டன் ஐபோன்களை அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வது கூட நமக்கு தெரியும்.
அந்த வகையில் இப்போது வந்திருக்கும் ஒரு புதிய செய்தி என்னவென்று காண்போம். நாம் அனைவரும் நமது ஊர்களில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை தாண்டி உலக திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டோம். மேலும் உலக சினிமாவை நாம் அதிகம் பின்பற்றியும் வருகிறோம். இந்த நிலையில் அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் பெரிய பிரச்சனையை உண்டாக்கியுள்ளது.
அதாவது சீனாவில் இனி வெளியாகும் ஹாலிவுட் படங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என அந்நாட்டு அரசு நேரடியாக தெரிவித்துள்ளது. இதுவரை வருடத்திற்கு பத்து ஹாலிவுட் படங்கள் சீனாவில் வெளியாகி பெரும் வசூல் குவித்து வருகின்றது. ஆனால் இனி சீனா அதற்கு அனுமதிக்காது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.