அமெரிக்க தேர்தலில் வெற்றி வாகை சூடிய தமிழர்: அமெரிக்காவில் நேற்று(05.11.2024) அதிபர் தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை தான் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 51% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் அதே தேர்தலில் இல்லினாய்ஸின் 8வது காங்கிரஸின் மாவட்டத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டார். இவர் 56.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அமெரிக்க தேர்தலில் வெற்றி வாகை சூடிய தமிழர்:
ராஜா கிருஷ்ணமூர்த்தி பற்றி தெரியாத ஒன்று உள்ளது. அதாவது, ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டில் உள்ள ராஜபாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர். அவரின் குழந்தை பருவத்திலே அவரது பெற்றோர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டனர்.
இப்படி தமிழன் அமெரிக்காவில் வெற்றி பெற்றது தமிழனுக்கு பெருமை சேர்த்துள்ளது. காங்கிரஸின் கமிட்டிக்கு தலைமை தாங்கிய முதல் தெற்காசிய அமெரிக்கர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




