• September 11, 2024

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு..!! மர்ம நபர் சுட்டுக்கொலை..!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது பக்க காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரது பாதுகாப்பு வீரர்கள் அனைவரும் அவரை சூழ்ந்து காப்பாற்றியுள்ளனர். இதில் ஒரு பாதுகாப்பு வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  அதன் பிறகு அருகில் உள்ள மருத்துவமனையில் டிரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு google சிஇஓ சுந்தர் பிச்சை, முன்னாள் அதிபர் ஒபாமா, அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Previous

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி என்கவுன்டர் – சென்னையில் பரபரப்பு..!!

Read Next

இந்தியன் வங்கியில் வேலை..!! 1500 பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular