
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது பக்க காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரது பாதுகாப்பு வீரர்கள் அனைவரும் அவரை சூழ்ந்து காப்பாற்றியுள்ளனர். இதில் ஒரு பாதுகாப்பு வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அருகில் உள்ள மருத்துவமனையில் டிரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜனநாயகம் மற்றும் அரசியலில் வன்முறைக்கு இடமில்லை. துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த டிரம்ப் விரைவில் குணமடைய விழைகிறேன் என கூறியுள்ளார்.