
- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்திருவைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையானது கரூரில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு மற்றும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.